அடேய் கணேஷ
கல்லாதவனுக்கு அறிவு கொடு, கற்றவனுக்கு அதைவிட அதிகமான அறிவு கொடு..
அடேய் கணேஷ
ஏழைகளுக்கு ஞானம் கொடு, பணக்காரர்களுக்கு அதைவிட அதிகமான ஞானம் கொடு..
அடேய் கணேஷ
என்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்கும், என் எதிரே நிற்கும் பிச்சைக்காரனுக்கும் உள்ள இடைவெளியை எப்பொழுதட குறைப்பாய்?
அடேய் கணேஷ
என்னுடைய சிந்தனைக்குள் புகுந்து என்னை ஏன் துன்ப படுத்துகிறாய்.. கொஞ்சமேனும் வழிகாட்டு ?
அடேய் கணேஷ
தைரியம் கொடு, ரிஷிகளின் வம்சத்தில் வந்த பாரத மக்களின் அறியாமையை போக்க..
அடேய் கணேஷ
வீரம் கொடு, மதங்களை அழிக்க, கடவுளை ஒழிக்க, சாதி பிரிவுகளை நிறுத்த
அடேய் கணேஷ
அறிவு கொடு, என்னை சுற்றியுள்ள முட்டாள்களுக்கு அறிவு கொடுக்க
அடேய் கணேஷ
இன்னும் இன்னும் அன்பு கொடு, சுற்றியுள்ள எல்லா ஜீவன்களிடமும் அன்பு காட்டு. ஊரும் எறும்பு, கடிக்கும் கொசு, குறைக்கும் நாய், புலி, பாம்பு எல்லாரிடத்திலும் அன்பு காட்ட..
கொஞ்சம் என்னையும் கண் திறந்து பாரடா கணேஷ..
No comments:
Post a Comment